Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Sunday, September 9, 2012

உலகெல்லாம் புகழ் பெற்ற ஜெய்ன் டெயிலர் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு(முயற்சி).

தகதகக்கும் சிறு தாரகை


தகதகக்கும் சிறு தாரகையே!
வியப்பளிக்கும் பெரு விந்தையே!
உலக எல்லையின் உச்சம்,
வானத்தின் வைர மச்சம்.


கதிரவன் விழி நித்திரை கொண்ட நேரம்,
கலைஞனிவன் ஒளி கார்த்திகைத் தீபம்.
இவன் சிரிப்பில் சிதறிய சொச்சம்,
இருண்ட இரவுக்கெல்லாம் வெளிச்சம்.


குன்றிய தீப்பொறிக்கெல்லாம் இருளில்,
நன்றி சொல்வதோ பாதசாரிகள்.
உன் மின்னல் உத்தரவின்றி,
இன்னல் செய்கிறது இரவுச் சாலைகள்.


மறைந்திருந்து எப்போது பார்த்தாலும்,
நிறைந்திருந்து நீலவானத்தை உயிரூட்டுவான்.
வானத்து இப்பாலகன் உறங்கமாட்டான்,
சயனத்து ஆதவன் எழும்பாதவரை.


உருவில் சூரியனுக்குப் பிணக்கானாலும்,
இரவில் வறியவருக்கு விளக்காவான்.
யாரிவனென அறியில எனது சிந்தை,
தகதகக்கும் சிறு தாரகை.


தகதகக்கும் சிறு தாரகை,
வியப்பளிக்கும் பெரு விந்தை.
உலக எல்லையின் உச்சம்,
வானத்தின் வைர மச்சம்.

- நீச்சல்காரன்


மூல வடிவம்:

Twinkle, Twinkle, Little Star

Twinkle, twinkle, little star,
How I wonder what youare.
Up above the world so high,
Like a diamond in thesky.

When the blazing sun is gone,
When he nothing shinesupon,
Then you show your little light,
Twinkle, twinkle, all thenight.

Then the traveller in the dark,
Thanks you for your tiny spark,
He could not see which way to go,
If you did not twinkle so.

In the dark blue sky you keep,
And often through my curtainspeep,
For you never shut your eye,
'Till the sun is in the sky.

As your bright and tiny spark,
Lights the traveller inthe dark.
Though I know not what you are,
Twinkle, twinkle,little star.

Twinkle, twinkle, little star.
How I wonderwhat you are.
Up above the world so high,
Like a diamond in thesky.

-Jane Taylor

2 மறுமொழிகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

மொழி மாற்றம் நன்றாக செய்து உள்ளீர்கள்...

/// வானத்து இப்பாலகன் உறங்கமாட்டான்,
சயனத்து ஆதவன் எழும்பாதவரை.///

ரசித்தேன்... நன்றி...

Dr. Karthiban Harikrishnan said...

அற்புதம் வாழ்த்துக்கள்