அந்நியம்
Info Post
பங்காளிச்சண்டையில்
மூக்குடைந்து
மூடிக்கிடக்கிறது
தண்டபாலத்தினருகே
ஒரு கோவில்
மழைகாலத்தில்
தோலுரித்து
சாம பூசைகளை
சாக்கடையில் விட்டு
சூரியவிரதமிருக்கும்
நேந்துவிட்ட படையல்கள்
பகுத்தறிவு பேசி
காற்றோடு கைவீசி
ஏமாற்றங்களை
எழுதித்தந்தது
அண்டவரும் மேய்ச்சல்கள்
நுகர்ந்துவிட்டு உதாசிண
நாட்கள் தற்கொலையின்
நுனியில் தப்பித்தவை
ரயில் நசுக்கியெஞ்சிய
நிம்மதி ஓராயிரம்
வாய்ச்சண்டையில்
சொந்தங்களோடு
சோகமாயுள்ளது
நித்தமும் அர்ச்சனைகள்
சத்தமான பிளவுகள்
வெம்பிய காயங்கள்
தங்கிய சுவடுகள்
பூமிக்குள் அழுத்தப்படுகிறது
புதைந்த நிழலில்
புது மரங்கள் பட்டு
மொட்டையான கோபுரங்கள்
சிதிலமாகி சிற்றுயிராய்
குப்பை மேடானது
நெகிழியையும்
கண்ணாடிகளையும்
பங்காளிகளாக
இறக்கிவிட்ட
ரயில்பயணிகள்
பூமியை ஏன்
கோவில் என்றனர்?
குறிப்பு: இது 'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் கவிதைப் போட்டிக்காக
5 மறுமொழிகள்:
அர்த்தம் பொதிந்த வரிகளால் ஆன கவிதைத் தோரணம் அழகு ! வெற்றி பெற வாழ்த்துகள் !
மிகவும் நன்றாக இருக்கிறது...வெற்றிபெற வாழ்த்துக்கள் தோழரே...
சக்தியின் மனம்,
அவனி அரவிந்தன்,
கமலேஷ் மிக்க நன்றி
வாழ்த்துக்கள்
நன்றி மதன்
Post a Comment