வார்த்தைகள்
இடைமறிக்கப்பட்டு
இனம்காணும்
பொழுதில் எங்கோ
உதிக்கும் கற்பனை.
தூக்கத்தைத் தியாகம்
செய்து
அதில் கவிதைகளை
ஒத்திகை பார்க்கும்
கவிஞன்...
இவ்வாறுயிருக்கையில்
உறக்கத்தில் பறிபோன
எண்ணக்காட்சிகள்
வார்த்தை வடிவம்
பெறும்முன்னே
கனவாகிவிடும்
அந்த சாமத்தில்
வார்த்தைகள்
பரிமாறப்பட்டு
கொள்ளும்
வள்ளுவனுடனும்
பேசலாம்..
விரட்டிவந்த கேள்விக்கு
தீணி கிடைத்துவிடும்
பேனாக்களில்லாமல்
நெஞ்சில் தைக்கும்
கவிதைகள்!
சிறைபட்ட கருத்துக்களை
பொறுக்கி
சிந்திக்கையில்
அதிகாலை நான்குமணி
கவிதையை வெளியிட்ட வார்ப்பு தளத்திற்கு நன்றி
http://www.vaarppu.com/view/2010/
நான்குமணிக் கவிதை
Info Post
11 மறுமொழிகள்:
சிறைபட்ட கருத்துக்களை
பொறுக்கி
சிந்திக்கையில்
அதிகாலை நான்குமணி
...........விடிய விடிய கவிதை .............. :-)
ரசித்தேன்.!
வாருங்கள் chitra, வாருங்கள் ஸ்ரீராம் உங்கள் வரவு எனக்கு ஊக்கத்தை தருகிறது
நன்றி
நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்...
கமலேஷ் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்
கவிதையை ரசித்தேன்.
அருமை...
-
DREAMER
அய்யா நீச்சல் காரரே ! என்ன சொல்ல வருகிறீர்கள்?
எதையோ சொல்லவந்தேன் விடிந்துவிட்டது என்கிறீர்கள் நீங்கள் எதை சொல்லவருகிறீர்களோ அதை சொல்லுமுன்னே ஒரு யுகமே மாறிவிடும் தெரியுமா? சொல்ல வந்ததையே தெளிவாக சொல்ல முயலுங்கள் அப்புறம் உங்கள் கவிதை யாருக்கு பயன் படும் என்பதை விமர்சனம் செய்வோம்
Post a Comment