காதலுக்கு நிறங்களில்லை
அம்மாவாசையிரவுகள்
சாட்சி
உன்னை ஆயிரம்பேர் சுற்றினாலும்
ஆயிரத்தில் ஒருவனாக
நானும் சுற்றுவேன்
கிரஹனங்களில்
காதல்சிற்பங்கள் படைக்கலாம்
தொழில்நுட்பங்கள் நமக்காக
நீ திரும்பி திரும்பி
பார்ப்பதால் தான்
எனக்கு விடியல்கள்
தெரிகிறது
மேகங்களுடன் சண்டையிட்டு
படமெடுக்கிறேன் உன்னை
தாகங்களுடன் அலைய
வைக்கிறாய் என்னை
எனதறைகள் உயிருட்டப்பட
உனது புகைப்படங்கள்
ரம்யமாக காட்சிக்கு வைக்கிறேன்
செயற்கை அழகை ரசிக்க
இயற்கையான பயணம்
கனவு
இயற்கை அழகை ரசிக்க
செயற்கையான பயணம்
செயற்கைகோள்-நான்
சூழல்குறிப்பு: பூமியின் காதலன் செயற்கைகோளின் கற்பனைகள்
காதல் செய்
Info Post
0 மறுமொழிகள்:
Post a Comment