சரக்கின்றி என்னைப்போல்
சுற்றும், என் சைக்கலும்
ப்ரேக்கின்றி வாழ்வை
துளைத்துவிட்டது.
தீப்பெட்டிக்குள்ளிருக்கும்
ஒற்றைத் தீக்குச்சிக்கு
ஆயுள் கெட்டி
சமையல் கட்டில்
பூனை தூங்குவதால்.
பீடிக்கட்டுகள்
உயிர் பிழைக்கிறது
உதட்டுப் புண்களின்
புது வரவால்.
ஒவ்வொருயிரவும் ஆயிரம்
கனவுகள் அவ்வளவும்
கெட்டுப்போன வயிற்றுக்குள்
விட்டுப்போன ஊறுகாய்கள்.
அஞ்சறை பெட்டிக்குள்
ஏதுமில்லாத வறுமையின் உச்சம்
சிகரெட்டு பெட்டிக்குள்ளும்
பரவிக்கொண்டது.
என் சட்டைகளுக்கு
பாக்கெட்டுகள் ஊனம்
கடனாளிகளின்
வாழ்கைச் சின்னம்.
சோறு போடாத வீட்டுக்காரியும்
வீட்டு நாய்களையும் விரட்டிவிட்டு
வீட்டை காக்கின்றேன்
தவணைக்காரனிடமிருந்து.
வானமே நடிக்க
கற்றுகொண்டது
விடிந்தபின்னும்
எனக்கு விடியலை
காட்ட மறுக்கிறது.
சுற்றும், என் சைக்கலும்
ப்ரேக்கின்றி வாழ்வை
துளைத்துவிட்டது.
தீப்பெட்டிக்குள்ளிருக்கும்
ஒற்றைத் தீக்குச்சிக்கு
ஆயுள் கெட்டி
சமையல் கட்டில்
பூனை தூங்குவதால்.
பீடிக்கட்டுகள்
உயிர் பிழைக்கிறது
உதட்டுப் புண்களின்
புது வரவால்.
ஒவ்வொருயிரவும் ஆயிரம்
கனவுகள் அவ்வளவும்
கெட்டுப்போன வயிற்றுக்குள்
விட்டுப்போன ஊறுகாய்கள்.
அஞ்சறை பெட்டிக்குள்
ஏதுமில்லாத வறுமையின் உச்சம்
சிகரெட்டு பெட்டிக்குள்ளும்
பரவிக்கொண்டது.
என் சட்டைகளுக்கு
பாக்கெட்டுகள் ஊனம்
கடனாளிகளின்
வாழ்கைச் சின்னம்.
சோறு போடாத வீட்டுக்காரியும்
வீட்டு நாய்களையும் விரட்டிவிட்டு
வீட்டை காக்கின்றேன்
தவணைக்காரனிடமிருந்து.
வானமே நடிக்க
கற்றுகொண்டது
விடிந்தபின்னும்
எனக்கு விடியலை
காட்ட மறுக்கிறது.
பின் குறிப்பு: குடி குடியை கெடுக்கும்
இதை பரிந்துரைத்த விகடனுக்கு நன்றிகள்.
6 மறுமொழிகள்:
mika yatharthamana kavithai.... Super ...
super kalakkal kavithai.... asathunga..
Thatchai kannan & Anonymous தங்கள் ஊக்கத்திற்கு நன்றிகள்
உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்
உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்
tamil10 மூலம் டிராபிக் பெறமுடியவில்லையே :(
you can visit our site http://tamilparks.50webs.com here you can send your articles to us...we are ready to pubish your blog link along with your each article so by reading your article you can get more visitors...
Post a Comment