Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Sunday, May 16, 2010

இரண்டு காதல் கவிஞர்கள் மீண்டும் சந்தித்த வேளையிலே வார்த்தைகள் வரவில்லை கவிதைகள் தான் வருகிறதாம்

இவள்இவன்

வெகுளியான கிறுக்கல்கள்.
விரல்கள் சொல்லித்தான்
பேனா கேட்கிறது
கைப்பிடிப்பது எப்போதென்று?

உறவுச்சங்கிலிகள் வலுப்பெற
காலச்சக்கரம் நிலுவையில்..
கலங்கி விடாதே!
அச்சாணியாக இந்தப்பக்கங்கள்


உறவின் சிகரத்திலிருந்து
உரிமையின் கடலுக்கு
விழுவதற்காகவே எழுகிறேன்
ஒவ்வொரு விடியலிலும்

எனது விடியல்களுக்கு
நிலவுகள் உதிக்கும்
அதுவும் என்பெயர் சொல்லி
உன்னைப்போல சிரிக்கும்

தூதாகவந்த பௌர்ணமிகள்
காற்றில் கரையுதே!
தேயாத மதியை
காண கண்கள் உறையுதே!

மகிழ்ச்சியின் உச்சத்தில்
காற்றில் எழுதிய என்
கவிதைகளை பொறுக்கிக்கொள்.
காற்றை நம்பமாட்டேன்.

காற்றைக்கூட நம்புவேன்!
உன் திசையிலிருந்து தானே
என்மேல் வீசுகிறது,
கவிதைகளை பேசுகிறது.

திசைகாட்டிகள் எனக்கில்லை
என் கிழக்கு நீதான்
உன்னை மட்டுமே சுற்றுவேன்
ஒரு சாட்டையைப்போல

நன்றி விகடன் http://youthful.vikatan.com/youth/Nyouth/neechalkaranpoem21102009.asp

6 மறுமொழிகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கவிதையில் மூழ்கிட்டேன். நீச்சல்காரா காப்பாத்து. நல்லா இருக்கு நண்பா.

Unknown said...

பிரமாதம்,, வாழ்த்துக்கள்

சைவகொத்துப்பரோட்டா said...

கலக்கல் நண்பா!! வாழ்த்துக்கள்!!

Chitra said...

வாழ்த்துக்கள்!!! அருமையாக வடித்துள்ள அழகிய கவிதைக்கும் - யூத்புல் விகடனில் வெளியாகி உள்ளதற்கும். ......

நீச்சல்காரன் said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா),
@கே.ஆர்.பி.செந்தில்,
@சைவகொத்துப்பரோட்டா,
@Chitra

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி

அன்புடன் மலிக்கா said...

அருமை கவிதை அழகாகயிருக்கிறது. வாழ்த்துக்கள்.