இரண்டு காதல் கவிஞர்கள்
மீண்டும் சந்தித்த வேளையிலே வார்த்தைகள் வரவில்லை கவிதைகள் தான் வருகிறதாம்
இவள் | இவன் |
வெகுளியான கிறுக்கல்கள்.
விரல்கள் சொல்லித்தான்
பேனா கேட்கிறது
கைப்பிடிப்பது எப்போதென்று? | |
|
உறவுச்சங்கிலிகள் வலுப்பெற
காலச்சக்கரம் நிலுவையில்..
கலங்கி விடாதே!
அச்சாணியாக இந்தப்பக்கங்கள்
|
உறவின் சிகரத்திலிருந்து
உரிமையின் கடலுக்கு
விழுவதற்காகவே எழுகிறேன்
ஒவ்வொரு விடியலிலும் | |
|
எனது விடியல்களுக்கு
நிலவுகள் உதிக்கும்
அதுவும் என்பெயர் சொல்லி
உன்னைப்போல சிரிக்கும் |
தூதாகவந்த பௌர்ணமிகள்
காற்றில் கரையுதே!
தேயாத மதியை
காண கண்கள் உறையுதே! | |
|
மகிழ்ச்சியின் உச்சத்தில்
காற்றில் எழுதிய என்
கவிதைகளை பொறுக்கிக்கொள்.
காற்றை நம்பமாட்டேன். |
காற்றைக்கூட நம்புவேன்!
உன் திசையிலிருந்து தானே
என்மேல் வீசுகிறது,
கவிதைகளை பேசுகிறது. | |
|
திசைகாட்டிகள் எனக்கில்லை
என் கிழக்கு நீதான்
உன்னை மட்டுமே சுற்றுவேன்
ஒரு சாட்டையைப்போல |
நன்றி விகடன் http://youthful.vikatan.com/youth/Nyouth/neechalkaranpoem21102009.asp
6 மறுமொழிகள்:
கவிதையில் மூழ்கிட்டேன். நீச்சல்காரா காப்பாத்து. நல்லா இருக்கு நண்பா.
பிரமாதம்,, வாழ்த்துக்கள்
கலக்கல் நண்பா!! வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள்!!! அருமையாக வடித்துள்ள அழகிய கவிதைக்கும் - யூத்புல் விகடனில் வெளியாகி உள்ளதற்கும். ......
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா),
@கே.ஆர்.பி.செந்தில்,
@சைவகொத்துப்பரோட்டா,
@Chitra
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி
அருமை கவிதை அழகாகயிருக்கிறது. வாழ்த்துக்கள்.
Post a Comment