விக்கலில் எகிறிக்
குதித்த சிறு குடல்
ஏமாற்றத்துடன்
புரண்டு படுத்தது
சுவாசத்துடன் உள்சென்ற
பிராணவாயு ஓட்டியசுவறொன்றில்
முட்டிக் கொண்டு
பெருமூச்சாய் ஏக்கப்பட்டது
உயிருப்பை உறுதி செய்ய
பொறுப்பான ஒரு சுய
சமிக்ஞைக் கருவி
வயிற்றைவிட்டால் வேறில்லை
வயிறு உறுமிக்
காட்டிக்கொடுத்த பசிக்குத்
ஆயுள் முழுதும் தீனி
போட்டாக வேண்டும்
இரண்டு துளைகளுக்கு
நடுவே நடக்கும்
பட்டினிப் போரில்
பசி பிறந்து விடுகிறது.
பசியோடு தொடங்கியது
பசிக்கு இயங்கியது
பசியால் வளர்ந்தது
பசிக்காக மடியுது உலகு
புத்தகத்தில் படித்து இதுவென்று
புரிந்து கொண்டனர் -பணவான்கள்
பரம்பரை நோய் இதுவென்று
பழகிக் கொண்டனர் -பாட்டாளிகள்
------------
வார்ப்பு கவிதை இதழிலும் படிக்கலாம்
5 மறுமொழிகள்:
தீர்ந்து விட்டால் தீரும், தீராத நோய்...
ஆக்கம் வெகு அருமை நீச்சல்காரன். ஆரம்ப பத்தி படிப்பவரின் முதுகில் சாட்டையால் அடித்து நிமிர வைக்கிறது. படத்தேர்வு நன்று.
பகிர்வுக்கு நன்றி.
பகிர்வுக்கு நன்றி நண்பரே
கற்றதும் பெற்றதும்
உலகின் முதல் இருபது இணைய தளங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/most-popular-websites-on-internet.html
உலகின் முதல் இருபது இணைய தளங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/most-popular-websites-on-internet.html
Post a Comment